குத்தாலம் அருகே ஓட்டை பிரித்து வீட்டினுள் புகுந்த முகமூடி நபர் மூதாட்டியை மிரட்டி தாக்கி ஏழரை பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் பாடகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி.75. ஓட்டு வீட்டில் மூத்த மகன் முத்துக்குமாரசாமி பராமரிப்பில் தனியாக 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார். கடந்த 24ஆம் தேதி நல்லிரவு ஓட்டை பிரித்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஜெயலட்சுமியை மிரட்டி தாக்கி ஏழரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 50,000 பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். பொழுது விடிந்ததும் நடந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாலையூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட எஸ்பி சினேகா பிரியா நேரில் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாவட்ட எஸ்பி சினேகா உத்தரவின் பெயரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வயது முதிர்ந்த தன்னை கழுத்தை நெரித்து முகத்தை கையாள் அழுத்தி கொள்ள முயற்சித்ததாகவம், கையில் அணிந்திருந்த மூன்று பவுன் வளையல் அரை பவுன் மோதிரம் நாலு சவரன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு முன் வாசல் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடி விட்டதாகவும் மூதாட்டி தனக்கு நடந்த கொடுமையை அச்சத்துடன் தெரிவித்தார்.

















