உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தூய்மை பணியை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தொடங்கி வைத்தார்.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டம் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் மோகன் சந்திரன் கோவில் வளாகத்தில் தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் :- மாவட்ட சுற்றுலா அலுவலர் செல்வராஜ், திருவாரூர் வட்டாட்சியர் இளங்கோவன்
கோவில் அலுவலர்கள் ஊழியர்கள்
உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்













