தவெக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாய குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் தொடங்கியவுடன், விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறையுடன் இணைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 75 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, நுகர்பொருள் வாணிப கழகத்தை கூட்டுறவுத்துறையுடன் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டண முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.







