கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது ஆட்சியர் புகார் அளித்தவுடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என திருவள்ளூரில்
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்..
திருவள்ளூர் விருந்தினர் மாளிகையில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அவர்
நவம்பர் 26 சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி ஒப்படைத்த நாளை சட்ட நாளாக புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருவது போல் இந்த ஆண்டும் கொண்டாட உள்ளோம். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி, முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மூத்த வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொள்கின்றனர் எனவும் அரசியல் அமைப்பு சட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக புரட்சி பாரதம் கட்சி மட்டும் தான் இந்த நாளை கொண்டாடி வருகிறது. என தெரிவித்த அவர் திருப்பரங்குன்றம் தீபம் சம்பந்தமான வழக்கு குறித்த கேள்விக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் என்னென்ன சூழ்நிலைகள் இருக்கிறது. ஒரு சில உண்மைகள் நீதிமன்றத்திற்கு தெரியாமல் போய் இருக்கலாம். ஆகவே அதை அரசு சரியான முறையில் பொது மக்களுக்கோ, மாற்று மதத்தினருக்கோ எந்த விதமான சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாம். அது இயல்புதான் எனவும், கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி சம்பவம் நாட்டையே உலுக்கி கொண்டிருப்பது குறித்து கேட்ட கேள்விக்கு, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது முதல் தகவல் அறிக்கை காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது குறித்து வழக்கு தான் முடிவு செய்யும். கைது செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் கைது செய்வார்கள். மாவட்ட கலெக்டர் புகார் கொடுத்ததுமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் காலம் தாழ்த்தி இருக்கக் கூடாது. தவெக ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதாக சொல்ல முடியாது. இது எல்லா ஆட்சியிலும் நடக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம்தான். சட்டம் ஒழுங்கு பிரச்சனையில்காவல்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உளவுத்துறை காவலர்கள் அனைவரும் விழிப்போடு இருந்து ஒரு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே அதை தடுக்க வேண்டும். சுனக்கம் காட்டுபவர்களை இடம் மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாத புதிய அரசு ஆறு மாத காலம் வரை அரசை வழி நடத்துகிறார்கள் என்பது பெரிய விஷயம். சிறப்பான ஆட்சியை கொடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார். புரட்சி பாரதம் தவெக-வுக்கு எந்த விதத்திலும் ஆதரவும் இல்லை.. எதிர்ப்பும் இல்லை. யார் நல்லது செய்கிறார்களோ அவர்களை புரட்சி பாரதம் ஆதரிக்கும்.
அடிக்கடி கோபப்படும் வைகோ தன்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்வது நல்லது.
நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தன்னை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்குப் பிறகு எந்த தகவலும் இல்லை எனவும் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.







