திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன்பு விவசாய சங்கம் மண்ணை பாலு தலைமையில் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய தமிழக அரசை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இவர்களின் பிரதான கோரிக்கையாக விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் தள்ளுபடி என்பதை ரத்து செய்து அனைவருக்கும் தள்ளுபடி வழங்க வேண்டும். 30.04.2025க்கு முன்பு நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
FILE NAME: TVR FARMER PROTEST NEWS.







