திண்டுக்கல் மாவட்டம் பச்சை மலையான் கோட்டை செம்பட்டியில் மகா கும்பாபிஷேக விழா…..
திண்டுக்கல் மாவட்டம் பச்சை மலையான் கோட்டை கிராமம் பழைய செம்பட்டியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முருகன், அருள்மிகு ஸ்ரீ கருப்பணசாமி, அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன், அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீர்த்தங்கள் அழைத்தல்,பகவத் பிரார்த்தனை,வேத பாராயணம், அஷ்ட திரவிய ஹோமம் கோ பூஜை ,கடம் புறப்பாடு போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வினை அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் கோவில் பூசாரிகளான ரவிச்சந்திரன், திருலோக சுந்தர், கிஷோர் குமார், சேகர், மோகன், சுபாஷ் ,அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் பூசாரிகளான மணிவண்ணன், பிரசாந்த்,ஸ்ரீதரன்,மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.நிகழ்வில் திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணா முருகன்,சோமசுந்தரம்,ஊர் பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்பிரசாதம் பெற்று சென்றனர்.







