காவிரியில் புகழ்பெற்ற துலா உற்சவர் தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுபடி தண்ணீர் திறக்காததால், வெளியூரிலிருந்து நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் :-
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றை மையப்படுத்தி கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் மயிலாடுதுறை ஐப்பசி கடை முக காவிரி தீர்த்தவாரி முக்கியமான ஒன்றாகும். மயூரநாதர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்கள், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான பரிமள ரங்கநாதர் ஆலயம் ஆகியவற்றிலிருந்து ஐப்பசி கடைசி நாள், சுவாமி அம்பாள், தாயார் ஆகியோர் காவிரி கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் காட்சியளித்து புகழ்பெற்ற தீர்த்த வாரி நடைபெறுவது வழக்கம். வட இந்தியாவில் புகழ்பெற்ற கும்பமேளா போல், தென்னிந்தியாவின் புகழ் பெற்ற விழாக்களில் துலாம் உற்சவ தீர்த்த வாரியும் ஒன்றாகும். கடை முக தீர்த்த வாரி திருவிழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தீர்த்தவாரிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்ட நிலையில், தண்ணீர் வந்து சேரும் என்றுதமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசு உறுதி அளித்தபடி தண்ணீர் திறந்து விடாத காரணத்தால், 16 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள புனித துலா கட்டப்பகுதி வறண்டு காணப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் காலை முதல் நீராடும் நிலையில், சொற்ப அளிவிலான பக்தர்களே காவிரியில் அமைக்கப்பட்டுள்ள, போர்வெல் தண்ணீர் மூலம் நீராடி வருகின்றனர். வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றமடையில் அடைந்துள்ளனர்.
பைட்: –
முத்துக்குமாரசாமி – பக்தர்







