திண்டுக்கல் கூட்டுறவு நகரில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோவிலில் பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்ப முருகன் வள்ளி – தெய்வானைக்கு திருக்கல்யாணநிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவில், திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விரத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் கூட்டுறவு நகரில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும்..
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர். தொடர்ந்து சிவபூஜை திருக்காட்சி, சிவ உபதேச திருக்கோலம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளுதல், முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருக்காட்சி கோவில் வளாக பாதையில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக செல்வ விநாயகர் கோவிலில் பாலமுருகன் , வள்ளி – தெய்வானைக்கு திருக்கல்யாணமானது நடைபெற்றது.
மணமகன்,மணமகள் வீட்டார் சீர் வரிசை தட்டுடன் வலம் வந்தனர்.
அர்ச்சகர்கள் திருக்கல்யாணத்திற்கு முன்னரே மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி அளித்தனர் பின்னர் சன்னதி முன்பு வேத மந்திரங்கள் முழங்க முருகன் வள்ளிக்கும், தெய்வானைக்கும், திருமங்கலம் கட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது. புது தம்பதியர்கள் மாலையுடன் பொதுமக்களுக்கு காட்சி அளித்தனர்..
இந்த திருகல்யாண விழாவில் பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க திருக்கல்யாண வைபோக நிகிழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் கூட்டுறவு நகர் , MVM நகர், மற்றும் சுற்றியள்ள பொதுமக்கள் திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்து தம்பதிய சகீதமாக காட்சியளித்த முருகப்பெருமான் ஆசிர்வாதம் பெற்றுச் சென்றனர்..
திருமண நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளை வீட்டு சார்பாக ராஜசேகர் திராவிட ராணி மற்றும் செந்தில் சாந்தினி ஆகியோர் சீர்வரிசையும்
பெண் வீடு தெய்வானை அம்மையார் சார்பாக நாகப்பன் ஏகம்மை மற்றும் முரளி சசிகலா குடும்பத்தாரும்வள்ளி சார்பாக ராம்பிரபு ரோகினி குடும்பத்தாரும் சீர்வரிசைகளை எடுத்து வந்தனர் .. திருக்கல்யாணத்தை கோவில் அர்ச்சகர் துளசி ராஜ் தலைமையில் பில்லம நாயக்கன்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் பரம்பரை அறங்காவலர் பாலாஜி மற்றும் நரசிங்க பெருமாள் ஆகியோர் விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி மாலை மாற்றுதல் நிகழ்வோடு
திருமணத்தை நடத்தி வைத்தனர்…







