தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருள் கிடைக்காததாலும் கைரேகை வைக்கக்கூடிய இயந்திரம் சரிவர இயங்காததாலும் பொதுமக்கள் அவதி…
திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன... துவரம் பருப்பு, அரிசி, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் வாங்கி செல்வார்கள்...
இந்த நிலையில் இந்த மாதத்தில் ஆயுத பூஜை விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை வந்து சென்ற நிலையில் பல்வேறு இடங்களில் பாமாயில் தாமதமாக தான் கொடுக்கப்பட்டது. மேலும் தற்போது மாத இறுதி காலகட்டத்தில் பொதுமக்கள் நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்க சென்றால் அங்கு கைரேகை வைக்கக்கூடிய இயந்திரம் சரிவர இயங்காததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும்.. சென்று சென்று திரும்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது..
இதனால் பொதுமக்களின் பிற வேலைகளை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து சர்வர் சேவை குறைபாட்டையும்.. அதன் செயல்பாட்டையும் சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்..
இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர்களிடம் கேட்டபொழுது விரைந்து சரி செய்யப்பட்டு அனைத்து பொருட்களும் பொது மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்..

















