ராணிப்பேட்டையில்
பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழை
மக்களுக்கு வழங்கக் கோரி பத்து ரூபாய்
இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பொது செயலாளர்
நல்வினை விஸ்வராஜ் பங்கேற்பு!!!!
ராணிப்பேட்டை
மாவட்டத்தில்
போலி
பட்டாக்கள்
மூலம் விற்பனை
செய்யப்பட்டதாகக்
கூறப்படும் பஞ்சமி
நிலங்களை மீட்டு,
நிலமற்ற ஏழை, எளிய
மக்களுக்கு உடனடியாக
வழங்க வேண்டும்
என
கோரிக்கையை
வலியுறுத்தி, பத்து ரூபாய் இயக்கம்
சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இந்த
ஆர்ப்பாட்டத்திற்கு
மாநில துணைப்
பொதுச்செயலாளர் சமுக ஆர்வலர்
தர்மேந்திரன் தலைமை
தாங்கினார். மாவட்டச்
செயலாளர் வாசுதேவன்,
மாவட்டத் துணைச்
செயலாளர்
சுதாகர்,
வழக்கறிஞர் பிரிவு மாநிலத்
துணைச் செயலாளர்
திருமலை உள்ளிட்டோர்
முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர்,
வழக்கறிஞரும், தகவல்
அறியும் உரிமைச் சட்ட
ஆர்வலருமான டாக்டர்
நல்வினை விஸ்வராஜ்
சிறப்புரையாற்றினார்.
ராணிப்பேட்டை
மாவட்டத்தில் பஞ்சமி
நிலங்கள் தொடர்பாக
முறைகேடுகள்
நடைபெற்றிருந்தால்,
அவற்றை உரிய
விசாரணைக்கு
ட்படுத்தி
சட்டவிரோதமாக
விற்பனை செய்யப்பட்ட
நிலங்களை மீட்டு,
நிலமற்ற ஏழை மக்களுக்கு
வழங்க வேண்டும்
என ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது.
மேலும், போலி
பட்டாக்களை உடனடியாக
ரத்து செய்ய வேண்டும்
என்றும்,
பஞ்சமி நிலங்களைச்
சட்டவிரோதமாக
விற்பனை செய்தவர்களின்,
பத்திரப் பதிவை
செய்தவர்கள் மற்றும்
பட்டா மாற்றத்திற்குத்
துணைபோன
அதிகாரிகள் மீது உரியவிசாரணை நடத்தி,குற்றம் செய்த அதிகாரிகள் மீது
குற்றவியல் மற்றும் லஞ்ச
ஒழிப்புச் சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடு மாவட்ட ஆட்சியிலே நடவடிக்கை எடு ஊழல் போன அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய் என தண்டனை கோரிக்கைகளையும் முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் அறிவு இருக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் மாவட்டத்தில் இருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சமி
நிலங்கள் தொடர்பாக
அரசாணை எண் G.O.
Ms. No. 166 மற்றும்
உச்ச நீதிமன்றத்தின்
தொடர்புடைய
தீர்ப்புகளை முழுமையாக
அமல்படுத்த
வேண்டும் என்றும்
தமிழக அரசையும்,
வருவாய்த் துறையையும்
வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்றவர்கள்,
“தமிழ்நாடு அரசே!
பஞ்சமி நிலங்களை
மீட்டுக்கொடு! வருவாய்த்
துறையே! போலி
பட்டாக்களை ரத்து
செய்!” என்பன உள்ளிட்ட
கோஷங்களை எழுப்பித்
தங்களது கண்டனத்தைப்
பதிவு செய்தனர்.
பஞ்சமி நிலங்களை
மீட்பது தொடர்பாக
அரசும்,
தமிழக
வருவாய்த் துறையும்
உரிய நடவடிக்கை
எடுத்து, நிலமற்ற ஏழை
மக்களின் உரிமைகளைப்
பாதுகாக்க வேண்டும்
என்பதே ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்றவர்களின்
முக்கிய கோரிக்கையாக
இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

















