வேலூர்மாவட்டத்தில் இன்று முதல் வைட்டமின் ஏ உயிர் சத்து திரவம் அளிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் துவங்கி வைத்தார்
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் அங்கன்வாடி மையத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்ட முகாம் இன்று துவங்கப்பட்டது இதனை ஆட்சியர் துவங்கி வைத்தார் இன்று முதல் வைட்டமின் ஏ திரவம் அளிக்கும் இம்முகாம் வரும் 31ஆம் தேதி வரையில் 6 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் நடக்கிறது துணை சுகாதார நிலையங்கள் அங்கன்வாடி மையங்கள் மூலமாக சுமார் 1244 பணியாளர்கள் சுமார் 91,791 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கபடவுள்ளது இந்த வைட்டமின் குறைபாடுகளால் மாலைக்கண் பார்வை இழப்பு வயிற்று போக்கு நிமோனியா உள்ளிட்டவைகள் ஏற்படும் எனவே ஊட்டசத்து குறைபாடுகளிலிருந்து பாதுகாத்துகொள்ள திரவ சொட்டு மருந்தை அளிக்குமாறு ஆட்சியர் கேட்டுகொண்டார் இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணா ,மாநகர நல அலுவலர் பிரதாப் குமார்,மாமன்ற உறுப்பினர் சுமதிமனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
இந்த வைட்டமின் ஏ திரவம் வழங்கிய ஸ்புனை சுடு தண்ணீரில் கழுவாமல் சாதா நீரில் கழுவி மற்ற குழுந்தைகளுக்கு கொடுத்தது நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் எதிர்காலத்தில் இது போல் கொடுக்க கூடாது என அங்கிருந்த மக்கள் கோரினார்கள்

















