காட்பாடியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி விழா மற்றும் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.இதனை பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி துவக்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆர்.எஸ்.எஸ் வேலூர் மாவட்டம் சார்பில் விஜயதசமி விழா மற்றும் அணிவகுப்பு ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலத்தை பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி துவக்கி வைத்தார். இதில்ஆர்.எஸ்.எஸ். வட மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ ராமகிருஷ்ண பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் தொடங்கி இந்த அணிவகுப்பு ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது.ஊர்வலத்திற்கு முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் சேவகர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் 60 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

















