ஜப்பான் நாட்டில் நடைபெற்ற உலக நல்லிணக்க கருத்தரங்கில், தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்று உரையாற்றினார், ஜப்பானின் பாரம்பரிய Jomon ஜோமொன் நடனத்துடன், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன :-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின்
27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், இந்திய ஜப்பானிய ஆன்மீக கூட்டமைப்பு சார்பில், எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் உலக நல்லிணக்க கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் நாட்டில், நதிக்கு கங்கை ஆராதனை, புத்த விகாரத்தில் சரஸ்வதி லட்சுமி கணபதி ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்ற நிலையில் இன்று சமய நல்லிணக்க கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்று தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் உரையாற்றினார். ஜப்பானிய சைவ ஆதியுடன் பாலகும்ப குருமுனிகள் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், ஜப்பானிய பாரம்பரிய நடனம் ஆன Jomon ஜோமொன் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நடனம், ஜப்பானில் சமய சடங்குகள், அறுவடை , வேட்டையாடுதல் இவற்றின் போது ஜப்பானியர்கள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் ஏராளமான ஜப்பானியர்கள் பங்கேற்றனர்.













