சீர்காழியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்
நகரப் பகுதியில் குப்பைகள் தேக்கம் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட ,ரயில்வே ரோடு, இரனியர் நகர், சிதம்பரம் ரோடு, தாடாளன் கோவில், ஊழியன் காரன் தோப்பு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஈசானிய தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள், குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி உள்ளிட்டைகளில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தினம் தோறும் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் நாள்தோறும் ஊதியம் ரூ 540 வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கான சம்பளத்தினை ரூ. 640 ஆக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அப்போது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அவர்களை பணிக்கு வர வைப்பதுமாக சீர்காழி நகராட்சி வாகத்தில் இருந்து வந்தது இதனிடையே இன்று
அரசாணை 62 இன் படி ஊதியம் வழங்க கோரியும்,
தூய்மை பணியாளர்களுக்கு தேவையான தளவாடப் பொருட்கள்,வாகன வசதிகளை செய்து தரக்கோரியும்,
மாதவிடாய் விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க கோரியும்,
அரசு விடுமுறை நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க கோரியும்,
ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட 13 சதவீத இ.பி.எப் பணப்பயனை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும்,
சுமார் 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடும் வெயிலினால் போராட்டக்காரர்கள் களைப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதனால நகரில் பெரும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.













