பி எம் மெட்டீரியல் ராகுல் காந்தி சிஎம் மெட்டீரியல் முதலமைச்சர் விஜய் என்று மயிலாடுதுறை எம்பி சுதா செய்தியாளர் கேள்விக்கு பதில்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த மயிலாடுதுறை எம்பி சுதாவிடம் விஜய் பிரதமர் வேட்பாளர் என்று தவெக எம்எல்ஏக்கள் கூறுவது பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த எம்பி சுதா கூறுகையில் 2029 தேர்தலில் இந்த தேசத்தின் தவிர்க்க முடியாத பிரதமராக உருவாகப்போவது இளம் தலைவர் ராகுல் காந்தி தான் என்றும், ராகுல் காந்தி பிரைம் மினிஸ்டர் மெட்டீரியல், விஜய் சீப் மினிஸ்டர் மெட்டீரியல் என்று கூறிச் சென்றார். முன்னதாக குத்தாலம் அருகே ராஜகோபாலபுரத்தில் ஓஎன்ஜிசி பழைய எண்ணைக் கிணற்றில் அனுமதி இன்றி விரிவாக்க பணிகளை நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எம்.பி. சுதாவிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கோரிக்கை விடுத்தார்.













