மணல் கொள்ளையை தடுக்கக்கோரி புகார்: சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
அரசு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்காத்த ஏன் என குற்றச்சாட்டு…
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பாக சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சங்கமித்திரன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மாற்று இடங்களில் மணல் அள்ளி விற்பனை செய்வதும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு சட்டவிரோதமாக மணல் கடத்துவதும் தொடர்ந்து நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
மணல்கொள்ளைக்கு சில அரசு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துணைபோவதாகவும் தெரிவித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து சில குவாரிகள் நிறுத்தப்பட்டதுடன்,
சுரங்கம் மற்றும் கனிமவளப் பாதுகாப்பு அதிகாரி, சீர்காழி கோட்டாட்சியர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, மணல் குவாரிக்கு ஆதரவாக தனது வீட்டிற்கு வந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், சுமார் 40 நாட்களாக அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மணல் கொள்ளை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், மாவட்ட எஸ்.பி. பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய அவர், இதை வலியுறுத்தி எஸ்.பி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பேட்டி:-
சமூக ஆர்வலர் ஷஙகமித்திரன், வழக்கறிஞர் மயிலாடுதுறை

















