மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது :-
எல் நினோ தாக்கம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைக்காலம் முடிந்த பிறகும், கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில், இன்று மாலை மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது.













