விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகளை அவர்களுக்கு உணர்த்தவும் ‘காய்கறிகள் மற்றும் பழங்கள் தினம்’ (Vegetables and Fruits Day) கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மாணவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற வண்ணமயமான ஆடைகளை அணிந்து சுட்டித்தனமான ‘பேஷன் ஷோ’ (Fashion Show) நடத்தி அனைவரையும் கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், முதல்வர் யமுனாராணி, ஒருங்கிணைப்பாளர் லலிதா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்













