கன்னியாகுமரி மாவட்டம்: தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 டாஸ்மாக் கடைகள் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட விஜய் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 96 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய விதிமுறைகளின்படி எத்தனை கடைகள் விதிகளுக்குப் புறம்பாக உள்ளன என்பது குறித்து அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதிகாரிகளின் ஆய்வில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு மிக அருகாமையில் மக்கள் இயங்கி வந்த 18 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. 18 கடைகளையும் மூடுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டு அடுத்த இரண்டு வார காலத்திற்குள் இந்தக் கடைகளை முழுமையாக மூடி சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் தமிழக அரசின் வழிபாட்டுத்தடங்கள் பள்ளி கல்லூரி அருகாமையில் இருக்கும் டாஸ்மார்க் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் முந்தைய ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை முடி மாற்று இடத்தில் அமைக்க கூடாது டாஸ்மார்க் கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பேட்டி: ஜெய் மோகன் ( சமூக ஆர்வலர்)














