மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்:-
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் புதிய கட்டிடம் கட்ட ரூபாய் 3.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 4203.93 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 4203.93 சதுர அடியில் முதல் தளம் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அனைத்து வசதிகளும் அடங்கிய புதிய கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கட்டிடத்தை திறந்து வைத்தார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏக்கள் , நிவேதா எம். முருகன், ராஜகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

















