• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே இடப்பிரச்னையில் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்ற உத்தரவு

by Satheesa
February 18, 2026
in News
0
மயிலாடுதுறை அருகே இடப்பிரச்னையில் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்ற உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை அருகே இடப்பிரச்னையில் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிள்ளியூா் ராமன்கோட்டகம் பகுதியை சோ்ந்தவா் சித்திரன் (62). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சோ்ந்த பிச்சைக்கண்ணு குடும்பத்தினருக்கும் இடப் பிரச்னை தொடா்பாக இருந்த முன்விரோதத்தின் காரணமாக 2022-ஆம் ஆண்டு பிச்சைக்கண்ணு குடும்பத்தினா் சித்திரன் குடும்பத்தினரை தகாத வாா்த்தையால் திட்டி, கட்டையால் தாக்கியுள்ளனா். இதில், தலையில் பலத்த காயமடைந்த சித்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சித்திரனின் மனைவி அஞ்சம்மாள் செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடராஜன் மகன் பிச்சைக்கண்ணு, கலியபெருமாள் மகன் பாலமுருகன், பிச்சைக்கண்ணு மனைவி ஜெயலெட்சுமி, ரவி மனைவி பிரியா, பாலமுருகன் மனைவி காளியம்மாள் ஆகியோா்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா்.

இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் வழக்கை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமுா்த்தி, பிச்சைக்கண்ணு(62), பாலமுருகன்(40) ஆகியோரை குற்றவாளிகள் என தீா்மானித்து இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து, இருவரும் கடலூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Tags: district newsmayiladuthuraitamilnadu
Previous Post

மன்னார்குடியில் 1கோடியே44லட்சம் மதிப்பிலான வணிகவரித்துறை அலுவலகதை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி திறந்தார்

Next Post

DMK-வின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் , “பாக்கி 28000 எங்கே..?

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
DMK-வின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் , “பாக்கி 28000 எங்கே..?

DMK-வின் கோட்டை என்று அழைக்கப்படும் முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் , "பாக்கி 28000 எங்கே..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6