May 1, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நெல் ஈரப்பத தளர்வு மறுப்பு : விவசாயிகளின் குரல் பிரதமருக்கு கேட்கவில்லையா ? – முதல்வர் ஸ்டாலின்

by Priscilla
November 20, 2025
in News
A A
0
நெல் ஈரப்பத தளர்வு மறுப்பு : விவசாயிகளின் குரல் பிரதமருக்கு கேட்கவில்லையா ? – முதல்வர் ஸ்டாலின்
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை தளர்த்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்றும், இந்த முடிவு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் குறுவை பருவ நெல் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியான கனமழையால் நெல் தானியங்களில் ஈரப்பதம் அதிகரித்து வருவதாகவும், அதனால் கொள்முதல் சிரமம் ஏற்படாமல் இருக்க தற்போதைய 17% ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த வேண்டும் என்று ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பின்னர் பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பங்கேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடிய நிலையில், தமிழ்நாட்டின் இந்த அவசர கோரிக்கை மத்திய தரப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடும் அதிருப்தி தெரிவித்த ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், “விவசாயிகளிடையே பிரதமர் பேசிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம். நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கையை ஏன் நிராகரித்தீர்கள்? விவசாயிகளின் கண்ணீர், குரல்… எதுவும் பிரதமருக்கு கேட்கவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டுகளில் இதே கோரிக்கைக்கு மத்திய அரசு பலமுறை அனுமதி வழங்கியிருந்தது, இந்த ஆண்டு மட்டும் ஏன் மறுப்பு? கனமழையால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நிவாரணமும் தராமல், ஈரப்பதத்தையும் தளர்க்காமல் இருப்பது எப்படி நன்மை செய்யும்? என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதற்குப் பின்னர், இன்னொரு முக்கிய கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தமிழக அரசின் அதிருப்தியாகும்.

மத்திய அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்து, நெல் கொள்முதல் சிக்கலில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tags: bjpdmkFARMERSmk stalinpaddyPM MODIprime ministertamil naduTN CHIEF MINISTER
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ் சினிமாவை விட மலையாள திரையுலகம் பெட்டர்.. : நடிகை ஆண்ட்ரியா ஓப்பன் டாக் !

Next Post

கேரளாவில் ‘மூளைத் தாக்கும் அமீபா’ பரவல் : சபரிமலை பக்தர்களுக்கு அபாயமில்லை !

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
கேரளாவில் ‘மூளைத் தாக்கும் அமீபா’ பரவல் : சபரிமலை பக்தர்களுக்கு அபாயமில்லை !

கேரளாவில் ‘மூளைத் தாக்கும் அமீபா’ பரவல் : சபரிமலை பக்தர்களுக்கு அபாயமில்லை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழகம் முழுவதும் அனைத்து சமூகநீதி விடுதிகளிலும் Gymவசதி, Wifiவசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்திதர என உறுதி

January 29, 2026
தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி

December 27, 2025
2025 விதை சட்ட வரைவு மசோதாவை  ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்பாட்டம்

December 10, 2025
வியட்நாம் பெருமழையில் கடும் பாதிப்பு – 52 பேர் உயிரிழப்பு

November 21, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.