July 28, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

by Satheesa
September 28, 2025
in Bakthi
A A
0
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புகழ் பெற்ற மிகவும் பழமையான கோவில் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
ஞீலி என்றால் சாமானிய மனிதர்கள் உண்ண தகுதியற்ற இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும் கல்வாமை எனப்படும் அறிய வகை வாழை மரத்தின் பழம். இந்த கல்வாழை மரம் தான் இந்த திருப்பைஞ்ஞீலி கோவிலின் தல விருச்சமாகும்.

வாழை மரங்கள் நிறைந்த தோட்டம் “ஞீலிவனம்” என அழைக்கப்படுகிறது. திருமண தடை மற்றும் திருமணம் காலதாமதம் ஆகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடக்கச் செய்யும் சிறந்த பரிகார தலமாக உள்ளது. இக்கோவிலில் சப்த கன்னிமார்கள் பார்வதி தேவியை குறித்து தவமியற்றிய போது, அவர்களுக்கு காட்சி தந்த பார்வதி தேவி, சப்தகன்னியர்களையும் இக்கோவிலிலேயே கல்வாழை எனப்படும் அதிசய வாழை வடிவில் இருந்து, வழிபடும் பக்தர்களின் குறைகளை தீர்க்குமாறு அருளினார்.

எனவே திருமண தடை மற்றும் கால தாமதம் ஆகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த தெய்வீக வாழைமரங்களுக்கு செய்யப்படும் பூஜை சடங்குகளால், சப்த கன்னியர்கள் ஆசீர்வாதம் கிடைக்க பெற்று திருமண தோஷம் நீங்குகிறது.

இந்த கோவிலின் தெய்வங்களான ஞீலிவனேஸ்வரர், அர்ச்சனை செய்து வழிபட்டு, கோவில் பிரசாதங்களை வாங்கி கொள்ள வேண்டும். பின்பு நேரே
நமது இல்லங்களுக்கு திரும்பி அக்கோவில் பிரசாதங்களை பூஜையறையில் வைத்து வழிபட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் குங்குமம், திருநீறு போன்றவற்றை திருமணம் நடக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் தங்களின் நெற்றியில் இட்டு வர வேண்டும். இந்த பரிகார முறைகளை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் திருமண தடை, தாமதங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.

ஞீலிவனேஸ்வரர் ஆலயம் முதலில் ஒரு முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது. இந்த இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகிறது.

திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞிலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற
பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல ச~;டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது.

திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞிலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை.

இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும் இந்த படிகள் இராவணின் சபையில் ஒன்பது நவக்கிரங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறர்கள். சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர்.

இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சந்நிதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்திரன், காமதேனு, ஆதிசே~ன், வாயு பகவான், அக்கினி பகவான், இராமர், அர்ச்சுணன், முனிவர் ஆகிய பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

மூலவர் சந்நிதியில் இரத்தின சபை இருக்கிறது. முனிவருக்கு அவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிவபெருமான் நடன தரிசனம் தந்து
அருளிய இரத்தின சபை தலம் இதுவாகும். இத்தலத்திற்கு மேலச் சிதம்பரம் என்ற பெயருமுண்டு. இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன.

இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள்.

நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும்.

திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்சீலி ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இவர் களைப்பைப் போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் இறைவன் காத்துக் கொண்டிருந்தார்.

களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி வற்புறத்தினார். அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். அந்தணரை நீர் எங்கு செல்கிறீர் என்ரு அப்பர் கேட்டதற்கு தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூற இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி ஆலயம் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்துவிட்டார்.

அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார். அப்பர் மனமுருகி சிவபெருமானை வழிப்பட்டார் பார்வதி தேவியுடன் ரி~பாருட வாகனத்திலி; சிவபெருமான் அப்பருக்கு காட்சியளித்த தலமாக திருப்பைஞ்ஞீலி விளங்குகிறது. இதனால் இங்குத் தனித் சன்னதியில் சோறுடையிஸ்வரராக காட்சியளிக்கிறார்.

பங்குனி புரட்;டாசி மாதங்களின் 6,7,8 வது நாள்களில் சூரிய பூஜை பெருவிழாவாக நடைபெறுகிறது. கோயிலுள்ள சூரிய ஒளி இறைவன் மீது படும் வகையில் கோயில் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தைப்பூச தினத்தன்று கொள்ளிடக்கரையில் சுவாமி எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளிய பின்னர் மற்ற கோயில்களின் சுவாமிகளுடன் சேர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

இத்திருக்கோயிலில் 9 படிகள் 9 நவக்கிரகங்களாகவும் 9 தீப வடிவிலும் உள்ளதாக ஐதீகம். எமன் சனீஸ்வரனுக்கு அதிபதி என்பதால் இக்கோயிலிலி; நவகிரகங்கள் கிடையாது.

இக்கோயில் பிரகாரத்தில் விநாயகர், சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் பெருமாளுடன் சேர்ந்தபடி காட்சியளிப்பதும், தட்சிணாமூர்த்தியின் கீழ்
நந்தி. இருப்பதும் சிறப்புக்குரியது. இறைவன் ஞீலிவனநாதரின் சன்னதியின் பின்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிப்பது விசே~மானது.

Tags: manachanallurNjilivaneswarar Templetamilnadutrichy
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இராமானுஜர்

Next Post

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி

Related Posts

மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
Bakthi

பனைமேடு அருள்மிகு செங்கம்மா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூவால் அபிஷேகம்

July 26, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
Bakthi

அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

July 24, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை
Bakthi

காரைமேடு கிராமத்தில் மகா திரிசூலம் வாராஹி அம்மன் கோவில் ஆடி மாதம் ஆஷாட நவராத்திரி பால்குட திருவிழா

July 23, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது
Bakthi

பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 26-ம் ஆண்டு தேர்பவனி & கொடியேற்று விழா

July 22, 2026
Next Post
திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.