July 31, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

இந்திய அணிக்கு மீண்டும் ஆலோசகராகும் தோனி ?

by Priscilla
September 1, 2025
in Sports
A A
0
இந்திய அணிக்கு மீண்டும் ஆலோசகராகும் தோனி ?
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இந்திய அணிக்கான ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்ச்சியான மாற்றங்களை சந்தித்து வரும் இந்திய அணி, எதிர்கால திட்டங்களை முன்னிட்டு இளம் வீரர்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. கேப்டன் மாற்றம் உள்ளிட்ட துணிச்சலான முடிவுகளை பிசிசிஐ எடுத்து வரும் நிலையில், தோனியை மீண்டும் அணியின் வழிகாட்டியாக நியமிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை இந்தியாவிற்கு வென்றுத் தந்த ஒரே கேப்டனாக தோனி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 2020ல் ஓய்வு பெற்ற அவர், தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கு முன், 2021ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கான ஆலோசகராக தோனி பணியாற்றியிருந்தார். அப்போது விராட் கோலி கேப்டனாகவும், ரவி சாஸ்திரி பயிற்சியாளராகவும் இருந்தனர். ஆனால், அந்தத் தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து, லீக் சுற்றிலேயே இந்தியா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீருடன் தோனி இணைந்து செயல்படலாம் என்பதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக மறக்க முடியாத கூட்டணியை அமைத்த இந்த இருவரும், மீண்டும் இணைவது ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்து, “தோனி ஆலோசகராக வந்தால், அவரது அனுபவம் இளம் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வீரர்களும் அவருக்கு பெரும் மரியாதை அளிக்கிறார்கள். தோனி – கம்பீர் கூட்டணி கவனிக்கத்தக்கதாக இருக்கும்,” என்றார்.

ஆனால், தோனியின் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை பிசிசிஐ அல்லது தோனி தரப்பில் எதுவும் வெளியாகவில்லை.

Tags: CRICKETMS DHONISPORTSt20 cricket
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உக்ரைன் மோதலுக்கு காரணம் : மேற்கத்திய நாடுகள் மீது புடின் குற்றச்சாட்டு

Next Post

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு : முக்கிய விவாதங்கள் என்ன ?

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
News

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்

June 11, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
Next Post
பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு : முக்கிய விவாதங்கள் என்ன ?

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு : முக்கிய விவாதங்கள் என்ன ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டு திருவிழா

July 23, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றியடைய வரலாற்று பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் 101 லிட்டர் பால் அபிஷேகம்

July 22, 2026
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் பிரபல நடிகர் அருள்நிதி பெற்றோருக்கு பீமரத சாந்தி விழா

July 12, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

0
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.