September 28, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

அம்மநாதர் திருக்கோயில்

by Satheesa
August 29, 2025
in Bakthi
A A
0
அம்மநாதர் திருக்கோயில்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நவகைலாயங்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அம்மநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவன், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். கோயிலுக்கு அருகிலேயே தாமிரபரணி ஓடுகிறது. கிழக்கு நோக்கி அருளும் சிவனை, “அம்மநாதர்’ என்றும், “அம்மையப்பர்’ என்றும் அழைக்கிறார்கள். இவரது சன்னதிக்கு வலப்புறம் ஆவுடைநாயகி அருளுகிறாள்.

இவளுக்கு கோமதியம்பாள் என்றும் பெயருண்டு. இந்த அமைப்பை சிவன், அம்பாளின் திருமணக்கோலம் என்பர். இக்கோயிலை நந்தனார் தரிசித்திருக்க வேண்டும். இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம்.

அரிசி வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிக்க, இங்கு வந்து அரிசிதானம், அன்னதானம் செய்கின்றனர். திருமண தோ~ம் உள்ளவர்கள், மாதுளம் பழச்சாறு அபிN~கம் செய்து, அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர்.

பலா மரம் இத்தலத்தின் தலவிருட்சம். இக்கோயிலை கட்டிய சகோதரிகள் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம், முன்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இருக்கிறது. அருகில் மற்றொரு தூணில் லிங்கபூஜை செய்யும் உரோமசரைக் காணலாம்.

சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது
மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு, உரோமசர் லிங்க பிரதி~டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில், அந்த லிங்கம் ஒரு அரசமரத்தின் கீழ் இருந்தது.

இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, தங்கள் வேலையை துவங்குவர். வெகுநாளாக ஒரு ஆதங்கம் அவர்களை வாட்டியது. இந்த லிங்கம், கோயிலில் இல்லாமல், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று! எனவே, சிவனுக்கு கோயில் கட்ட நினைத்தனர் அவர்கள்.

ஆனால், ஏழைகளான அவர்களிடம் கோயில் கட்டுமளவிற்கு பணம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சிறுகச்சிறுக சேர்த்து வைத்தனர். அவர்களது பக்தியில் மகிழ்ந்தார் சிவன். ஒருசமயம், அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து, உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டிய அவர், விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருப்பதில்லையோ, அதைப்போலவே மங்களமும் இருப்பதில்லை.

எனவே, மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன்,” என்று எழுந்தார். பதறிப்போய்விட்டனர் சகோதரிகள். அவசரத்தில் தேடியபோது,
விளக்கு இருந்த இடத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு, விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு, சுயரூபத்தில் காட்சி தந்தார்.

சகோதரிகள் சிவனை வணங்கினர். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக்கொண்டு இங்கு கோயில் எழுப்பினர். இத்தலத்தில் கொடிமரம் அருகில் நின்று. விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம்

Tags: Ammanathar templesiven templesouth indian siven templesouthindian templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு : பிரதமர் மோடி

Next Post

தாய் மண்ணில் கடைசி ஆட்டம் – ஃபேர்வெல் போட்டிக்குத் தயாராகும் மெஸ்ஸி !

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
Next Post
தாய் மண்ணில் கடைசி ஆட்டம் – ஃபேர்வெல் போட்டிக்குத் தயாராகும் மெஸ்ஸி !

தாய் மண்ணில் கடைசி ஆட்டம் – ஃபேர்வெல் போட்டிக்குத் தயாராகும் மெஸ்ஸி !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.