மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு வழிபாடு , 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது :-
மயிலாடுதுறை நகரில் வண்டிக்கார தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி கடை வியாபாரிகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை வழிபட்டனர். பின்னர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.













