திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்- 4ம் நாள் ஸ்ரீ செங்கமலவல்லி நாயகி சமேத ஸ்ரீ பள்ளிகொண்ட ரங்கநாத பெருமான், மணவாள மாமுனிகளுடன் தெப்பத்தில் எழுந்தருள கோலாகலமாக நடைபெற்றது தெப்ப உற்சவம்- திரளான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் திரு வன்புருஷோத்தம பெருமாள் கோவிலில் உள்ள தனித் சன்னதியில் மணவாள மாமுனிகள் தனி சன்னதியில் காட்சி தருகிறார். அவரது 656 வது திருநட்சத்திர நடை முன்னிட்டு திருநாங்கூர் ஏழு கோவில் ஆதினத்திற்கு உட்பட்ட ஏழு திவ்ய தேச பெருமாள் தினத்திற்கு ஒரு பெருமாள் மணவாள மாமுனிகளுடன் சேர்ந்து எழுந்தருள திருப்பாற்கடலில் தெப்ப உற்சவம் கடந்த 21 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 4ம் நாளான ஸ்ரீ செங்கமலவல்லி நாயகி சமேத ஸ்ரீ பள்ளிகொண்ட ரங்கநாத பெருமள் மணவாள மாமுனிகள் சன்னதியில் எழுந்தருவர் மாமுனிகள் மங்களாசாசனம் செய்த பின் அவருக்கு பெருமான் பகுமான மரியாதை முடிந்து திருவந்திகாப்பு நடைபெற்றது இரவு கோவிலில் இருந்து பெருமாள் மாமுனிகளுடன் வீதியுலாவாக சென்று திருப்பாற்கடலில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருள தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும் மாமுனிகளையும் தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை ஏழு கோவில் தேவஸ்தான பரம்பரை ஆதீன தர்மகர்த்தாக்கள் ரங்கநாதன், கண்ணன், கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் செய்திருந்தனர்.













