திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மயிலாடுதுறை மாவட்டம் வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு, மயிலாடுதுறை மாவட்ட எல்லை பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு
திருவாரூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்று சாலை மார்க்கமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தார். தொடர்ந்து மாவட்ட எல்லைப் பகுதியான, கொள்ளிடத்தில், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூபார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு சால்வை மற்றும் மலர் கொத்துகள் வழங்கி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காரில் அமர்ந்தவாறு அனைவரையும் பார்த்து கும்பிட்டவாறு ஸ்டாலின் கிளம்பி சென்றார்













