விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 36-ஆம் ஆண்டு தீபாவளி ஸ்வீட் கண்காட்சி! 200 வகை இனிப்புகள், 70 வகை கார வகைகள் இடம்பெற்றுள்ளன
பேட்டி உரிமையாளர் அனுஸ்வரியா
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தனியார் இனிப்பகத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 36-ஆம் ஆண்டு ஸ்வீட் கண்காட்சி நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பல்வேறு வகையான பாரம்பரிய இனிப்புகள் மற்றும் சிறப்பு இனிப்புகள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக, நெய் ஸ்வீட் வகைகள், பால் ஸ்வீட் வகைகள், பாதாம் மைசூர்பாக், பிஸ்தா ரோல், செவ்வாழை மைசூர்பாக் உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் தயாரிக்கப்பட்ட சிறப்பு இனிப்புகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன.
மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் சுமார் 200 வகையான இனிப்புகளும், 70 வகையான கார வகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய இனிப்புகள் மட்டுமின்றி, புதுமையான சுவைகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு சிறப்பு இனிப்பு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஒரே இடத்தில் பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் கார வகைகளைத் தேர்வு செய்து வாங்கும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. இதனால், தீபாவளிக்கான இனிப்புகள் மற்றும் கார வகைகளை வாங்க விரும்பும் பொதுமக்களிடையே இந்தக் கண்காட்சி கவனம் பெற்றுள்ளது.







