முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை? – 3 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட மணலி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணலி அருகே வசித்து வந்த இளைஞருக்கும் சிலருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று ஏற்பட்ட தகராறு முற்றியதில், மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணலி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மணலி போலீசார் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மணலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் அருகே கும்பலாக தாய்ப்பாஸ் விளையாடிய விவாகரத்தில்
நடந்த கொடூர கொலை சம்பவம் குறித்து மூன்று பேர் கொண்ட கும்பலை பால் பண்ணை மணலி போலீசார் தேடி வருகின்றனர்
மேலும் 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் சைபர் கிரைம் போலீசார் கொலை செய்த நபர்களை வலை வீசி தீவிரமாக
தேடி வருகின்றனர்

















