நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், அலமாதி உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதி சுற்றுவட்டார இடங்களில் நேற்று இரவு பரவலாக இடி மின்னலுடன் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றம், சோழவரம் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் கடந்த சில நாட்களாக 245 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 507 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1774 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 13.38 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 172 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

















