September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்

by Satheesa
September 1, 2026
in News
A A
0
சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சீமை கருவேலம் மரங்களுக்குள் படர்ந்திருந்த ஏரியை கண்டுபிடித்து தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் – இளைஞர்களின் தன்னெழுச்சியான முயற்சியால் 55 நாட்களில் சீமை கருவேல மரங்களை அகற்றி, ஏரியின் கரைகளை பலப்படுத்திய இளைஞர்கள் – அரசோ, தொண்டு நிறுவனங்களோ நிதி உதவி அளித்து ஏரியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது செட்டிச்சத்திரம் அய்யம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலம் காலமாக வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் மக்கள் விவசாய தொழிலையே தங்கள் முழு நேர தொழிலாக கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகின்றனர்.

வடவாறு பாசன பகுதியாக இருந்து வரும் இப்பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அய்யம்பேட்டை ஏரி என்ற ஒரு மிகப்பெரிய ஏரி பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த ஏரி மூலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வேளாண்மை செய்து வந்தனர்

30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் காரணமாக இந்த ஏரி முழுவதும் வற்றி வறண்டு காய்ந்து விட்டது. அதன் பிறகு இந்த ஏரி இருந்த இடமே தெரியாமல் முழுவதும் சீமை கருவேல மரங்கள் படர்ந்து காடாக காட்சியளித்தது.

காலப்போக்கில் அய்யம்பேட்டை பகுதியில் ஏரி ஒன்று இருந்தது என்பதையே அப்பகுதி மக்கள் மறந்து விட்டனர். ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். மேலும் வேளாண்மைக்கும், ஆழ்துளை கிணறுகளையே இவர்கள் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் அய்யம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 250 அடிக்கும் கீழாக சென்றுவிட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, நீர் பற்றாக்குறையை போக்குவது எப்படி என்று விசாரிக்கும் போது தான், ஒரு காலத்தில் நீர் மிகை பகுதியாக இந்த கிராமம் இருந்தது என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

மேலும் 110 ஏக்கர் கொண்ட அய்யம்பேட்டை ஏரி என்று ஒன்று இருந்ததும் அவர்களுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இளங்காற்று நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பித்து அதன் மூலம் ஏரியை தூர்வாரும் பணியை செய்ய முடிவெடுத்தனர்.

ஏரி ஒன்று இருப்பதையே மறந்த இக்கால மக்களுக்கு, அவர்களின் முந்தைய தலைமுறையை சார்ந்த முதியவர்களை அழைத்து அய்யம்பேட்டை ஏரி இருப்பது குறித்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஏரியின் பலன்கள் குறித்தும் அவர்களுக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து அய்யம்பேட்டை கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள், அவர்களது நண்பர்கள், மேலும் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்கும் இளைஞர்கள் ஆகியோரின் முயற்சியால் சுமார் மூன்று லட்சம் அளவுக்கு நிதி திரட்டி சில மாதங்களுக்கு முன்பு அய்யம்பேட்டை ஏரியை இளைஞர்கள் தூர்வாரத் தொடங்கினர்.

முழுவதும் சீமை கருவேல மரங்களால் நிறைந்திருந்த ஏரியை தூய்மைப்படுத்த தொடங்கிய இளைஞர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் முழுவதும் படர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை முழுவதுமாக அகற்றினர்.
சீமை கருவேல மரங்களை அகற்றியதும், ஏரியின் பரப்பளவை பார்த்து இளைஞர்கள் ஆச்சரியப்பட்டு உற்சாகத்துடன் தூர்வாரும் பணியை தொடர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஏரியின் கரைகளை பலப்படுத்தும் வகையில், மேடான பகுதியிலிருந்து மண்ணை எடுத்து ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் நிரப்பி ஏரியின் கரைகளை பலப்படுத்தினர்.

இளைஞர்களின் தன்னெழுச்சியான இந்த முயற்சியால், 3 லட்சம் அளவுக்கு நிதி திரட்டி சீமை கருவேல மரங்களை அகற்றி, ஏரியின் கரைகளை பலப்படுத்திய இளைஞர்கள், 55 நாட்களுக்குப் பிறகு நிதி பற்றாக்குறை காரணமாக மேற்கொண்டு பணியை தொடர முடியாமல் தற்போது நிறுத்தி வைத்துள்ளனர்.

தன்னார்வ அமைப்பினரோ, தொண்டு நிறுவனத்தினரோ அல்லது அரசோ இளைஞர்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து ஏரியின் தூர்வாரும் பணியை தொடர்ந்து நடத்தி, ஏரியை மீண்டும் கடல் போல் மாற்றுவதற்கு உதவி செய்ய வேண்டுமென இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முனிவேலங்குடி ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் கும்பாபிஷேகம் 

Next Post

ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 355வது ஆண்டு ஆராதனை விழா புஷ்பாஞ்சலி, பாகவத நாட்டிய ஆசீர்வாத நிகழ்ச்சி

Related Posts

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி
News

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

0
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

0
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

0
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

0
நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை சிசிடிவி

September 1, 2026
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா. என மாற்றுத்திறனாளி பெண் தரையில் அமர்ந்து அழுது புலம்பல்

September 1, 2026
சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சித்தர்கா அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்திய விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.