கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடிவீஸ்வரம் பகுதியில் பட்ட பகலில் மூதாட்டியை ஒருவர் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களுடன் கொலை வழக்கில் ஆறு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தது கன்னியாகுமரி மாவட்ட போலீசார்.
நேற்றைய தினம் பட்டப் பகலில் 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து கொலையாளி வீட்டுக்குள் சென்று மூதாட்டியை கொன்றுவிட்டு வீட்டில் இரந்த பணம் நகைகளை கொள்ளையடித்து சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில்
கொலை சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்கள் சேகரித்து விசாரணையை தொடங்கினர். சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் கண்டு குற்றவாளியை கைது செய்தனர் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் கொலையாளி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்ராஜ் ( 33) என தெரியவந்தது மேலும் கைது செய்யப்பட்ட நபர் கொலை செய்யப்பட்ட மூதாட்டிக்கு நன்கு அறிமுகமானவர் என்றும், வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி செய்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து, தங்க நகைகளை அபகரிக்கும் நோக்கில் கொலையை அரங்கேற்றியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து, நகைகளை மீட்ட கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.














