ஒரே நேரத்தில் முனிவேலங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்கள் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முனிவேலங்குடி கிராமத்தில் ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மற்றும் இரட்டைப் பிள்ளையார், கன்னியம்மன், விநாயகர், அய்யனார் கோவில் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கைலாசநாதர் கோவில் முன்பாக யாக சாலைகள் அமைத்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு கடந்த 28ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது அதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகா பூர்ணாகுதி தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வளம் வந்து முதலில் விநாயகர் ஆலயம், ஸ்ரீ இரட்டை விநாயகர்ஆலயம், கன்னியம்மன் ஆலயம்,அய்யனார் ஆலயங்களில்
கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.















