மயிலாடுதுறையில் சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி. மற்றொருவர் காயத்துடன் உயிர் தப்பினார். டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம்
செங்குடி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மகன் வினோத் (30). திருமணமாகாத இவர், இன்று தனது இருசக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்வரன் என்பவரை ஏற்றிக்கொண்டு கூறைநாடு பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை ஏற்றிச் செல்லும் லாரியை, வினோத் தவறுதலாக இடது புறமாக முந்திச் செல்ல முயன்றுள்ளார். (பொதுவாக வாகனங்களை வலது புறமாகவே முந்திச் செல்ல வேண்டும்). இதில் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கீழே சரிந்ததில் , வினோத் கீழே விழுந்து லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் பின்னால் அமர்ந்து வந்த ராஜேஸ்வரன் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து சேகர் என்பவர் லாரியை பறிமுதல் செய்து வேட்டங்குடியைச் சேர்ந்த லாரி டிரைவர் குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







