மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம் – மலர் தூவி அஞ்சலி.
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவையொட்டி, மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மௌன ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலம், கிட்டப்பா அங்காடி வரை நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சி.எஸ்.கோபிநாத், மயிலாடுதுறை நகர செயலாளர் ராஜ்குமார், தவெக கட்சியின் நிர்வாகி வி.ஜி.கே.செந்தில்நாதன் ஆகியோர் தலைமையில், திரளான தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்துகொண்டு, மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.பின்பு தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது மறைவையொட்டி தவெக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








