தரங்கம்பாடி தாலுக்கா பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனிப்பொழிவு நீடிக்கிறது இன்று காலையில் கடுமையான பனிமூட்டம் பனிப்பொழிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படுகிறது வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பெய்தது இந்நிலையில் கடந்த தீபாவளி அன்று மழை பெய்தது அதற்கு பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து விட்டது குறிப்பாக தரங்கம்பாடி தாலுக்காவில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்பட்டது இந்நிலையில் இன்று தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பொறையார் தில்லையாடி திருக்கடையூர் ஆக்கூர் செம்பனார்கோவில் மேமாத்தூர் சங்கரன் பந்தல் பெரம்பூர் திருக்களாச்சேரி உட்பட தாலுக்கா முழுவதிலும் கடுமையான பனிப்பொழிவு பனிமூடடம் நிலவியது காலை பல மணி நேரம் பனிப்பொழிவு காணப்பட்டது வயல்வெளிகள் சாலைகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது காலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வோரும் சிரமம் அடைந்தனர் மேலும் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன மழைத்துளிகள் போல் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது காலை நேரத்தில் குளிரும் நிலவியது.







