வரும் 26-ஆம் தேதி ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ஓணம் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது
தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரியில் ஒன்றிணைந்து பாரம்பரிய உடைகள் அணிந்து, மகிழ்ச்சியுடன் ஓணம் விழாவில் பங்கேற்றனர்.
திருவாதிரை நடனம், ஓணப்பாட்டு, வடம் இழுத்தல், குச்சிப்புடி உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், ஓணம் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், மகாபலி மன்னன் வேடமணிந்த மாணவர்களும் விழாவில் பங்கேற்று ஊர்வலமாக இருசக்கர வாகனத்தில் வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
தமிழகமும் கேரளமும் சார்ந்த மாணவர்கள் கலாசார வேறுபாடுகளை கடந்து, ஒரே குடும்பமாக இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடியது விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
பாரம்பரியம், கலாசாரம் மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த ஓணம் கொண்டாட்டம், மாணவ, மாணவிகளிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.














