மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது :-
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனிடையே அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு மழை இருக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து இன்று காலை முதல் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தரங்கம்பாடி , செம்பனார்கோவில் , மணல்மேடு , குத்தாலம் , சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் வெகு நாட்களுக்குப் பிறகு நல்ல மழை பெய்ததால் மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழை விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.







