விவசாயிகளுடைய கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றித் தரவில்லை என்றால் கடனில் பிறந்து கடனில் சாவதை விட கடலில் சாவது மேல் என்ற அறிவிப்பை அறிவிப்போம் என தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கூட்டு இயக்க தலைவர் தனபால் பேட்டி…
திருவாரூரில் தனியார் அரங்கில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்க தலைவர் தனபாலன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கூட்டத்தில் ஆலோசித்தனர்
மேலும் இந்த கூட்டத்தில் விவசாய கடன் முழு தள்ளுபடி, ராசிமணல் அணைக்கட்டுமானத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்க தலைவர் தனபாலன் அளித்த பேட்டியில்…
தமிழக சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது குறிப்பாக டெல்டா விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்தோம் ஆனால் இதுவரை முழுமையான அறிவிப்பு கிட்டவில்லை.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கூட்டு இயக்க கூட்டம் இன்று திருவாரூரில் நடைபெற்றது அதில் அரசுக்கு நான்கு கோரிக்கைகளை கையில் எடுக்கிறோம். விவசாயிகளுக்காக பேசக்கூடிய எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய பிரதான உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆளும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் அனைவரையும் சந்திக்கிறோம். எங்களுடைய மிக முக்கியமான நான்கு கோரிக்கைகளில் உங்களுடைய அளவில் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் என்பதே வலியுறுத்துகிறோம் அப்படி அவர்கள் அறிவிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை அங்கேயே அறிவிப்போம்.
விவசாய கடனை முழு தள்ளுபடி செய்ய வேண்டும். ராசிமணல் அணை கட்டுமானம் மேகதாது அணை கட்டுவதற்கு பக்க பலமாக அமையும் ராசிமணல் அணைக்கட்டுமானம் முற்றிலும் தமிழகத்திற்கு எதிரான நிலையை தரும் என்பதை அரசுக்கு தெரிவிக்கிறோம்.
நிவாரணம் என்பது பிச்சை அல்ல மறு முதலீடு என்பதை அரசின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் வறட்சி நிவாரணம் விவசாயிகளுக்கு தர வேண்டும். 2.O என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை துறையை ஒரு துறையின் கீழ் கொண்டு வரக்கூடிய திட்டத்தை உருவாக்கி இன்றைக்கு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அதை முழுமையாக நிறைவேற்றி வேளாண்மை துறையை சீரமைத்து ஒரு துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கையில் எடுத்து இருக்கிறோம் இதற்காக தமிழகத்தில் உள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து நிறைவேற்றி தர வேண்டும் என கூற உள்ளோம் அப்படி நிறைவேற்றித் தரவில்லை என்றால் கடனில் பிறந்து கடனில் சாவதை விட கடலில் சாவது மேல் என்ற அறிவிப்பை சென்னையில் அறிவிப்போம் எனக் கூறினார்.














