தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க வேண்டுமென வேண்டுதல் வைத்து தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் மயிலம் முருகன் கோவிலின் 365 படியின் மீது மண்டியிட்டு ஏறி சாமி தரிசனம் செய்தது தவெகயினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றார். தமிழக முதல்வராக பொறுப்பேற்க அரிது பெரும்பான்மை கிடைக்காததால் விஜய் முதல்வராக பதவி ஏற்பது என்பதில் சிக்கல் நீடித்து வருகின்றன. ஒரு புறம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவளித்தாலும் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தவெக வேட்பாளராக போட்டியிட்ட வடிவேல் பாமக வேட்பாளர் சிவக்குமாரிடம் தோல்வி பெற்றாலும் விஜய் முதலமைச்சராக வேண்டுமென வேண்டுதல் வைத்து மயிலம் மலைக்குன்றின் மீதுள்ள முருகனை தரிசிக்க 365 படிக்கட்டுகளையும் மண்டியிடு முட்டிபோட்டு ஏறி சாமியை தரிசனம் செய்தார். விஜய் முதல்வராக பதவியேற்க வேண்டுமென வேண்டுதல் வைத்து தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் மலை படியின் மீது மண்டியிட்டு ஏறி சாமி தரிசனம் செய்தது தவெகயினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.














