வேலூர் கஸ்பா பகுதியில் சோகம்மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி – மகன் இறந்த தகவல் கேட்டுஅதிர்ச்சியில் தந்தையும் பலியான சோகம்
வேலூரில் மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந் தார். மகன் இறந்த அதிர்ச் சியில் அவரது தந்தையும் மயங்கி விழுந்து பரிதாப மாக இறந்தார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கஸ்பா சித்தார்த்தர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தீபன்(60). இவரது மகன் சந்திரகாந்த் (25). இவர் திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சி மேடைகளை அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.அங்கு பரிசோதனை செய்த போது மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சந்திரகாந்த், சிகிச்சை பலனின்றி இறந்தார் இந்நிலையில் சந்திர காந்த் இறந்தது குறித்து மருத்துவமனையில் இருந்த உறவினர்கள், வீட்டில் உள்ள அவரதுதந்தை பார்த்தீபனுக்கு தகவல் தெரிவித்தனர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் கதறி அழுதபடி மயங்கி விழுந்தார் அருகில் உள்ள மருத்துவர்கள் ‘மூலம் பரிசோதித்த போது, அவர் மாரடைப் பால் இறந்துவிட்டது தெரியவந்தது.அதிர்ச்சியில் தந்தையும் பலியானார்
மகன் இறந்த அதிர்ச் சியில் தந்தையும் மார டைப்பால் இறந்த சம்ப வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







