வேலூர் கோட்டை மைதானத்தில் சூரசம்ஹாரம் பெருவிழா அரோஹரா முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தின் சார்பில் கந்த சஷ்டி நிறைவு நாள் சூரசம்ஹார பெருவிழாவானது வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது இதனை கலவைசச்சிதானந்த சுவாமிகள் துவங்கி வைத்தார் இதில் ஆறுமுகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வர அசுரர் வேடமணிந்தவர்கள் மேளதாளங்கள் முழங்க மண்டிவீதியின் வழியாக வேலூர் கோட்டை மைதானத்தை வந்தடைந்தனர் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே தேவர் போல் அசுரர் போல் வேடமணிந்தவர்கள் போரை நிகழ்த்தினார்கள் இதில் அசுரர்கள் கொல்லப்பட்டனர் அப்போது வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது பின்னர் இதில் மிஞ்சிய சூரபதுமனை ஆறுமுகப்பெருமான் தனது வேலாள் வதம் செய்யும் சூரசம்ஹாரமும் நடந்தது அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர்







