காவலரை சுத்தியலால் தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் சரகத்தை சேர்ந்த ரௌடி மனோஜ் @ மனோ நிர்மல்ராஜ் (25), த/பெ.ஜேசுதாஸ், அக்ரஹாரதெரு, பூவனூர் என்பவர் களப்பாள் காவல் நிலையத்தில் மாரிமுத்து என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாவார்.
அந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மனோ நிர்மல்ராஜ் மறைவிடம் தொடர்பாக நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் அவரை கைது செய்வதற்காக 16.08.2024-ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் மற்றும் காவலர் விக்னேஷ்வரனுடன் அங்கு சென்றபோது. ரௌடி மனோஜ் @ மனோ நிர்மல்ராஜ் காவலர் விக்னேஷ்வரனை சுத்தியால் தாக்கி உள்ளார் .
இது தொடர்பாக நீடாமங்கலம் காவல் நிலையத்தில் மேற்கண்ட ரௌடி மனோ நிர்மல்ராஜ் மீது வழக்கு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கானது திருவாருர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தநிலையில் இறுதி விசாரணை முடித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பில் மனோ நிர்மல்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டணையும், 3000 ரூபாய் அபராதமும் விதிக்கபட்டது . தொடர்ந்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.













