கும்பமேளா போல் மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழாவிற்காக வரும் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு :-
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கங்கை முதலான அனைத்து புண்ணிய நதிகளும் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்று வரும் நிலையில் 10 நாள் உற்சவம் கடந்த ஏழாம் தேதி மாயூரநாதர், வதான்யேஸ்வரர், காசி விசுவநாதர் ஆலயங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு பத்து நாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக திருக்கல்யாணம் திருத்தேர் பிரசித்தி பெற்ற கடை முக தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கடை முக தீத்த வாரி உற்சவத்திற்கு ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்,
மேலும் உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வரும் 21ம் தேதி சனிக்கிழமை ஈடுசேய்யும் பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







