• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் கந்தசஷ்டி உற்சவம்

by Satheesa
November 10, 2026
in News, News
0
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் கந்தசஷ்டி உற்சவம் தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாயன்று கந்தசஷ்டி உற்சவம் தொடங்கியது.

இதனை முன்னிட்டு கருவறையில் ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் முருகப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

முற்காலத்தில் வல்லன் எனும் அசுரனை முருகப்பெருமான் அழித்து கோயில் கொண்டமையால் இத்தலம் வல்லக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. சத்ரு சம்கார யாகம் செய்து வழிபடுவது இங்கு பரிகார சிறப்பாகும்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தலம் திருப்புகழ் பாடப்பெற்றதாகும்.

தேவர்களின் தலைவன் இந்திரன் வந்து வழிபட்டு இந்திராணியை கல்யாணம் செய்து கொண்ட புராண சிறப்பு வாய்ந்தமையால் வல்லக்கோட்டை கல்யாண பரிகாரத் தலமாக உள்ளது.

இங்கு பக்தர்களின் பிரார்த்தனையாக கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன் என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.

இங்கு கந்தசஷ்டி உற்சவம் தொடங்கியதை முன்னிட்டு அதிகாலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

பிறகு வெற்றிலை சாமந்தி செண்பகம் மலர் மாலைகளும் வெற்றிலைமலர் கிரீடமும் அணிந்து ராஜ அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலையில் திருக்கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வணங்கி விரதமாலை அணிந்து கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர்.

உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிவப்பு பட்டாடையும் சிவப்பு ரோஜா மாலைகளும் அணிந்து சிவப்பு சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.

ஆறுமுகர் சந்நிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. சஷ்டி மண்டபத்தில் உற்சவர் ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. உற்சவர் முன்பாக சத்ரு சங்கார திரிசதீ யாகம் நடைபெற்றது.

கந்தசஷ்டி உற்சவம் செவ்வாய்கிழமை தொடங்கியதால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வணங்கினர்.

வந்திருந்த பக்தர்களுக்கான நீர்மோர் முதலிய அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பொது தரிசனத்தில் சென்ற பக்தர்கள் ஒரு மணிநேரம் காத்திருந்தும் விரைவு தரிசனத்தில் சென்றவர்கள் சில மணித்துளிகளிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.

கந்தசஷ்டி உற்சவத்தை முன்னிட்டு ஆறுநாட்களும் மூலவர் சந்நிதியிலும் ஆறுமுகர் சந்நிதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

14 ஆம் தேதி வல்லம் சடையீஸ்வரர் திருக்கோயிலில் வேல்வாங்கும் நிகழ்ச்சியும் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சூரசங்காரமும் நடைபெற உள்ளது.

சூரசங்காரத்தை முன்னிட்டு சூர வாகனம் சீர் செய்யப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

கந்தசஷ்டி உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்களின் அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

மது போதை தலைக்கேறி நடுரோட்டில் ஹாயாக படுத்து கொண்டு வாகன ஓட்டிகள் இடையூறு ஏற்படுத்திய மது போதை ஆசாமி

Next Post

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான 8-ஆம் வகுப்பு மாணவன் விழுப்புரத்தில் மீட்பு

Related Posts

முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

ஆவடி கோவில் பாதகை ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு சாலைவசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அவதி

November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

சுங்குவார்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பத்திர பதிவு அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கொள்ளை சம்பவம்

குடியாத்தத்தில் பாமகவை சேர்ந்தவர் சுட்டுகொன்ற குற்றவாளி பூவரசனை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர்

November 10, 2026
Next Post
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான 8-ஆம் வகுப்பு மாணவன் விழுப்புரத்தில் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

ஆவடி கோவில் பாதகை ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு சாலைவசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் அவதி

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

சுங்குவார்சத்திரம் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக பத்திர பதிவு அரசு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கொள்ளை சம்பவம்

by Satheesa
November 10, 2026
முடிகண்டநல்லூர் கிராமத்தில் கடந்த ஒருவாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் இறந்ததால் பொதுமக்கள் பீதி
News

தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறி மாயமான 8-ஆம் வகுப்பு மாணவன் விழுப்புரத்தில் மீட்பு

by Satheesa
November 10, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6