ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோவில் பாதகை ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு சாலை வசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனை செல்ல முடியாமல் அவதி அடைவதாக குற்றச்சாட்டு
சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு கோவில் பாதகை கிருபா நகரில் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது அந்தப் பகுதியில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் இந்த மருத்துவமனை செல்வதற்கு சாலைகள் இல்லாமல் தற்போது மழைக்காலத்தில் சேரும் சகதியில் நடந்து வருவதாகவும் சில கர்ப்பிணிகள் பள்ளத்தில் விழுந்து அடிபடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால்நடைகள் சாணம் மற்றும் நாய்கள் அங்கே படுத்து சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் ஆவடி மாநகராட்சி சுகாதார நல அலுவலர் இந்தப் பகுதிக்கு வருவதில்லை என்றும் குற்றம் சாட்டு வருகின்றனர் குறிப்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் அவர்கள் மருத்துவமனை மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் சாலைகளை ஆய்வு செய்து கர்ப்பிணி பெண்கள் சென்று வரும் வகையில் சாலைகள் அமைத்தும் சுகாதாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பிரதான கோரிக்கை வைத்துள்ளனர்
ptc ஆவடி ராஜன்








