செம்பனார்கோவிலில் பழுதாகி நின்ற அரசு பேருந்து , பொதுமக்கள் மற்றும் பயணிகள் ஒன்றிணைந்து பேருந்தின் பின்பக்கம் தள்ளிச்சென்ற அவலம் , கடும் போக்குவரத்து பாதிப்பு :-:
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பேருந்துகள் சாலையில் பழுதாகி நிற்பதும் படிக்கட்டுகள் உடைந்து விழுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே இன்று காலை
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து 2b என்ற அரசு பேருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு மன்னம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாக பூம்புகார் சென்று கொண்டிருந்தது. அப்போது செம்பனார்கோவில் கடை வீதியில் பயணிகளை ஏற்ற நின்ற பேருந்து திரும்ப புறப்படாமல் பிரேக் டவுன் ஆகி சாலையிலேயே நின்றது. இதனால் செம்பனார்கோவில் கடைவீதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அனைத்து தொடர்ந்து கடை வீதியில் நின்ற பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் அனைவரும் இணைந்து பேருந்தின் பின்பக்கம் தள்ளி விட்டனர். சிறிது தூரம் தள்ளிய பிறகு பேருந்து எங்க துவங்கியது. பின்னர் பேருந்து அங்கிருந்து இயக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.














