ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ பரவியது. ஜெருசலேம் அருகே காட்டுத் தீ பற்றியதில், பல கிராமங்கள் அபாயத்தில் உள்ளன.
ஏராளமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அடக்க முயற்சிக்கின்றனர். தீ விபத்தில் சிக்கிய 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேற்கு காற்று புறநகர்ப் பகுதிகளுக்கு நகரத்திற்குள் கூட தீயை எளிதில் தள்ளும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.















