1 உறுப்பினர் கூட இல்லாத போது சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என திமுக நகர்மன்ற உறுப்பினர் காரசார கேள்வி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர்.
முன்னதாக மூன்று மாதங்களுக்குப் பிறகு கூட்டம் நடைபெற்ற நிலையில் திமுக நகர்மன்ற உறுப்பினர் சாமிநாதன் எழுந்து, ஒரு த. வெ. க நகர் மன்ற உறுப்பினர் கூட இங்கு இல்லாத நிலையில் சீர்காழி நகர் மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் இந்த அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது புரோட்டோகால் படி விஜய் படம் வைக்கக்கூடாது என வாக்குவாதம் செய்தார். இதனால் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரை மற்ற மன்ற உறுப்பினர்கள் அரசாணை தெரியாமல் பேசாதீர் அமருங்கள் எனகூறி அமர வைத்தனர் அதனைத் தொடர்ந்து பேசிய நகர்மன்ற உறுப்பினர் ரமாமணி சீர்காழி நகராட்சியில் பிறப்பு,இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்கப்படுகிறது.இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.













